இன்று முதல் கூகுள் போட்டோசில் 15 ஜிபிக்கு மேல் தரவுகள் வைத்திருந்தால் அதற்காக மாதம் அல்லது வருட சந்தாவை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.மேலும் பழைய 15 ஜீபி இலவச ஸ்டோரேஜில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை இணைய வழியாக கூகிள் போட்டோஸ் எனப்படும் கூகிள் ஸ்டோரேஜில் இலவசமா சேமித்து வந்தோம்.தற்போது அந்த இலவசத்திற்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கூகுள்.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் கூகுள் போட்டோசில் 15 ஜிபிக்கு மேல் தரவு வைத்திருப்பவர்களுக்கு கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது.கடந்த வருடமே இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது கூகுள்.இந்த புதிய மாற்றம் இன்று(ஜூன்1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி 15ஜீபி மேல் தரவுகள் இருந்தால் கூகுள் ஒன்-ல் மாதம் அல்லது வருட சந்தாதாராக இணையவேண்டும்.தவறும் பட்சத்தில் 15 ஜீபிக்கு மேல் உள்ள தரவுகள் எல்லாம் தானாகவே அளிக்கபட்டுவிடும்.
மேலும் கூகிள் ஒன் திட்டத்தில் ஆரம்ப கட்டணமாக மாதம் 100ஜீபி ஸ்டோரேஜிற்கு 130ரூபாயாகவும்,வருடத்திற்க்கு 1300 ரூபாயாகவும்.அடுத்தபடியாக மாதம் 200ஜீபி ஸ்டோரேஜிற்கு 210ரூபாயாகவும்,வருடத்திற்க்கு 2100ரூபாயாகவும், 2டீபி ஸ்டோரேஜிற்கு 650ரூபாயாகவும்,வருடத்திற்க்கு 6500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் உங்களது ஸ்டோரேஜ் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக