ஒரு வாட்ஸ்அப்(whatsapp) கணக்கை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் புதிய வசதியை(Multiple device feature) வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.. . வாட்ஸ்அப் நிறுவனம் தொடங்கியது முதல் இன்று வரை வாட்ஸ்அப் மற்றும் அதன் அனைத்து வசதிகளையும் இலவசமாகவே பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. பேஸ்புக்கிற்க்கு சொந்தமான வாஸ்அப் பயனாளர்களை தக்கவைத்து கொள்ள பல்வேறு புதிய வசதிகளை வழங்கிய வண்ணம் உள்ளது. தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட்டாக ஒரு வாட்ஸ்அப் கணக்கை ஒரே நேரத்தில் 4பல்வேறு குறிப்பிடப்பட்ட சாதனங்களில் பயன்படுத்தும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக பேஸ்புக் தலைவர் மார்க் சக்கர் பெர்க் மற்றும் வாட்ஸ்அப் தலைவர் வில்காட்கார்ட்(will cathcart) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது வரை ஒரு வாட்ஸ் கண்க்கை வாட்ஸ்அப் வெப் மூலம் ஒரே ஒரு சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது.தற்போது அதற்கு முற்றுப்புள்ளியாக ஒரு கணக்கை 4 பல்வேறுசாதனங்களில் பயன்படுத்தும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் ஒரு கணக்கை பல்வேறு ஸ...
இ ன்று முதல் கூகுள் போட்டோசில் 15 ஜிபிக்கு மேல் தரவுகள் வைத்திருந்தால் அதற்காக மாதம் அல்லது வருட சந்தாவை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.மேலும் பழைய 15 ஜீபி இலவச ஸ்டோரேஜில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை இணைய வழியாக கூகிள் போட்டோஸ் எனப்படும் கூகிள் ஸ்டோரேஜில் இலவசமா சேமித்து வந்தோம்.தற்போது அந்த இலவசத்திற்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கூகுள். ஜூன் ஒன்றாம் தேதி முதல் கூகுள் போட்டோசில் 15 ஜிபிக்கு மேல் தரவு வைத்திருப்பவர்களுக்கு கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது.கடந்த வருடமே இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது கூகுள்.இந்த புதிய மாற்றம் இன்று(ஜூன்1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி 15ஜீபி மேல் தரவுகள் இருந்தால் கூகுள் ஒன்-ல் மாதம் அல்லது வருட சந்தாதாராக இணையவேண்டும்.தவறும் பட்சத்தில் 15 ஜீபிக்கு மேல் உள்ள தரவுகள் எல்லாம் தானாகவே அளிக்கபட்டுவிடும். மேலும் கூகிள் ஒன் திட்டத்தில் ஆரம்ப கட்டணமாக மாதம் 100ஜீபி ஸ்டோரேஜிற்கு 130ரூபாயாகவும்,வருடத்திற்க்கு 1300 ரூபாயாகவும்.அடுத்தபடியாக மாதம் 200ஜீபி ஸ்டோரேஜிற்கு 210ரூ...